டிரீம் 11 உடனான ரூ.385 கோடி ஒப்பந்தம் முறிந்தது - பி.சி.சி.ஐ. செயலாளர்


டிரீம் 11 உடனான ரூ.385 கோடி ஒப்பந்தம் முறிந்தது - பி.சி.சி.ஐ. செயலாளர்
x

இதனையடுத்து பி.சி.சி.ஐ. விரைவில் ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

மும்பை,

சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் டிரீம் லெவன் மற்றும் எம்.பி.எல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதில் டிரீம் 11 நிறுவனம் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்தது.

இந்த சூழலில் புதிய ஆன்லைன் விளையாட்டுகள் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள டிரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. டிரீம்11 - பி.சி.சி.ஐ. உடனான உறவு 2023-ம் ஆண்டு 358 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தின் கீழ் தொடங்கியது. மறுபுறம் பி..சி.சி.ஐ.-யும் டிரீம் 11 உடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் டிரீம் 11 உடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் டிரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் பி.சி.சி.ஐ. உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது” என்று கூறினார்.

இதனையடுத்து பி.சி.சி.ஐ. விரைவில் ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

1 More update

Next Story