

புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் நடந்த டெல்லி கேப்பிட்டல் சுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 156 ரன் இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியா சத்தில் 5-வது வெற்றியை பெற்றது. சஞ்சு சாம் சன் 87 ரன்கள் (52 பந்து, 7 பவுண்டரி, 6 சிக் சர்) குவித்து ஆட்டநாயகன் விருதை பெற் றார்.பின்னர் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-
தொடக்கத்தில் சில தோல்விகள் ஏற்பட்டாலும் நானும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கும் எப் போதும் நேர்மறை எண்ணத்துடனே இருந் தோம். கடந்த ஆண்டை விட இந்த முறை மிகவும் பலமாக இருப்பதா கவே உணர்ந்தோம். சஞ்சு சாம்சனின் வருகை மற்றும் திடமான மிடில் வரிசை எங்களை இன்னும் வலுப்படுத்தியது.
எங்களது பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. எங்களுக்கு சில வெற்றிகள் மட்டுமே தேவையாக இருந்தது. 20 ஓவர் கிரிக்கெட் பொறுத்தவரை உத் வேகத்தை பெறுவது மிகவும் அவசியம். 3-வது ஆட்டத்திற்கு பிறகு அந்த வெற்றிகள் கிடைத்தன. அணியில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கினோம். வெவ்வேறு வீரர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஆடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சஞ்சு சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வெளிப்படுத்திய அதே சிறந்த ஆட்டத்தை இங்கும் தொடருகிறார். அவர் தான் இப்போது எங்கள் அணியின் பேட்டிங் முதுகெலும்பு. அதே நேரத்தில் பந்து வீச்சும் முக்கியமானது. ஒரு தொடரை வென்று தருவது பெரும்பாலும் பந்து வீச்சு தான். எதிரணி வீரர்கள் ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 10-12 ரன் கள் அடிக்கும் சூழலில், அகில் ஹூசைன், ஜாமி ஓவர்டான் அமைதியாக வந்து தங்கள் பணியை அற்புதமாக செய்வது எங்களுக்கு மிகுந்த நம்பிக் கையை தருகிறது. அன்ஷூல் கம்போஜ் புத்திசாலித்தனமான பவுலர். தனது பலம் என்ன என்பதை நன்கு அறிந்தவர். இன்றைய நாள் அவருக் குரியதாக இல்லை. ஆனால் அடுத்த ஆட்டத்தில் சிறந்த நிலையில் திரும்ப ஆர்வமாக உள்ளார்.
இவ்வாறு ருதுராஜ் கூறினார்.