ரியான் பராக் கேப்டன்ஷி:அஸ்வின் விமர்சனம்

ராஜஸ்தான் அணியை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், 2026 தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா அணி.
ரியான் பராக் கேப்டன்ஷி:அஸ்வின் விமர்சனம்
Published on

சென்னை,,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத் தில் நடைபெற்ற ஆட்டத்தில் முன் னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந் தித்தன.அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 155 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி , கார்த்திக் தியாகி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 19.4 ஓவர்களில் 161 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட்ட நிலையில் ரிங்கு சிங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்க விட்டு வெற்றி பெற செய்தார்.கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் அரைசதம் விளாசினார்.

இதன்மூலம் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், 2026 தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா அணி.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானின் தோல்விக்கு ரியான் பராக்கின் மோசமான கேப்டன்ஷிப்பே காரணம் என முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் சாடியுள்ளார். அவர் யுடியுப் சேனலில் பேசுகையில், 'உலகத் தரம் வாய்ந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந் திர ஜடேஜா 3 ஓவர்களில் 8 ரன்னுக்கு 2 முன்னணி விக்கெட்டுகளை சாய்த்தார். அப்படிப்பட்ட ஒரு பவுலருக்கு மேலும் ஒரு ஓவர் வழங்காதது ஏன் ? ரிங்கு சிங், அனுகுல் ராய் இருவரும் இடக்கை பேட்டர்கள். அவர் களுக்கு ஆப்ஸ்பின்னரான என்னால் நெருக்கடி கொடுக்க முடியும். இடக்கை பவுலர் ஜடேஜாவால் அது முடியாது என ரியான் பராக் நினைத்து விட்டார். அது தான் அங்கு நிலவிய மனநிலை. ஜடேஜா பந்து வீசும் போது பேட்ஸ்மேன் சிக்சர்கள் கூட அடிக்கக் கூடும். ஆனால் அவ ருக்கு வாய்ப்பளிக்காததன் மூலம் நீண்ட கால அடிப்படையில் உங்களது பந்து வீச்சு பிரிவு மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதையே இது காட் டுகிறது' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com