ரியான் பராக், சாம்சன் அரைசதம்..குஜராத் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்

ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக விளையாடிய ரியான் பராக் நடப்பு ஐ.பி.எல். தொடரில் தனது 3-வது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
ரியான் பராக், சாம்சன் அரைசதம்..குஜராத் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்
Published on

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், முந்தைய ஆட்டத்தின் ஹீரோ பட்லர் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதிரடியாகவும் அதே நேரத்தில் கவனமாகவும் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.நடப்பு ஐ.பி.எல். தொடரில் 3-வது அரை சதத்தை பூர்த்தி செய்த ரியான் பராக் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹெட்மேயர், தனது பங்குக்கு 13 ரன்கள் அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்களும், சஞ்சு சாம்சன் 68 ரன்களும் அடித்தனர். குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், ரஷித் கான், மொகித் சர்மா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com