எஸ்.ஏ.20 ஓவர் லீக்; டு பிளெஸ்சிஸ் அதிரடி...கேப்டவுன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சூப்பர் கிங்ஸ்

சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் டு பிளெஸ்சிஸ் 20 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
Image Courtesy: @JSKSA20
Image Courtesy: @JSKSA20
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் எம்.ஐ.கேப்டவுன் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து பேட்டிங் ஆடிய கேப்டவுன் அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டிஎல்எஸ் முறையில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு 8 ஓவர்களில் 98 ரன்கள் இலக்காக மாற்றி அமைக்கப்பட்டது.

இதையடுத்து சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளாய் மற்றும் டு பிளெஸ்சிஸ் களம் இறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 20 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் 5.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்களை எடுத்து சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com