எஸ்.ஏ.20 ஓவர் லீக்: சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ்

image courtesy:twitter/@DurbansSG
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நூர் அகமது தேர்வு செய்யப்பட்டார்.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ.20 ஓவர் தொடரில் நேற்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜோபர்க் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டர்பர் அணி கிளாசெனின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கிளாசென் 76 ரன்கள் அடித்தார். ஜோபர்க் தரப்பில் அதிகபட்சமாக வில்ஜோன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 31 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. இதன் காரணமாக ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு 16 ஓவர்களில் 147 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றப்பட்டது.
பின்னர் களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோபர்க் தரப்பில் டோனோவன் பெரீரா 51 ரன்கள் அடித்தார். டர்பன் தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
நூர் அகமது ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.






