எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ்
Published on

சென்சூரியன்,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதன் 3வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியினர், பிரிட்டோரியா அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சென் 51 ரன் எடுத்தார்.

பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் தரப்பில் டுபாவில்லன் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பிரிட்டோரியா அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 115 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிரிட்டோரியா தரப்பில் அதிகபட்சமாக மார்க்வெஸ் அக்கர்மேன் 39 ரன் எடுத்தார். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் தரப்பில் ரிச்சர்ட் க்ளீசென் 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் 2வது ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com