எஸ்.ஏ.20 ஓவர் லீக்: ஏலத்தில் பதிவு செய்த 13 இந்திய வீரர்கள்


எஸ்.ஏ.20 ஓவர் லீக்: ஏலத்தில் பதிவு செய்த 13 இந்திய வீரர்கள்
x

4-வது எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

மும்பை,

தென் ஆப்பிரிக்க உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரின் 4-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 25-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதற்கு முன் வீரர்களின் ஏலம் வருகிற செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது. ஐ.பி.எல். போன்று ஆர்டிஎம் கார்டு விதிமுறை இந்த ஏலத்தில் அறிமுகம் ஆகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாட பியூஷ் சாவ்லா, சித்தார்த் கவுல், அங்கித் ராஜ்புட் உள்ளிட்ட 13 இந்திய வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) விதிகளின்படி, ஐ.பி.எல். உள்பட இந்திய கிரிக்கெட் சம்பந்தப்பட்ட தொடர்களில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே பிற நாடுகளில் நடைபெறும் லீக் தொடர்களில் பங்கேற்க முடியும்.

அந்த சூழலில் இந்த 13 வீரர்களில் பியூஷ் சாவ்லா, சித்தார்த் கவுல், அங்கித் ராஜ்புட் (ஐ.பி.எல். மட்டும்) ஆகிய 3 பேர் இந்தியா மற்றும் ஐ.பி.எல். தொடர்களில் விளையாடி ஓய்வு பெற்று விட்டனர். மற்ற 10 வீரர்கள் அந்த அளவு பிரபலம் ஆகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

13 வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:-

மகேஷ் அஹிர், சருல் கன்வர், அனுரீத் சிங் கத்தூரியா, நிகில் ஜாகா, மொஹம்மத் பைத், கேஎஸ் நவீன், அன்சாரி மரூப், இம்ரான் கான், வெங்கடேஷ் கலிபெல்லி அத்துல் யாதவ்,சாவ்லா, கவுல் மற்றும் ராஜ்பூத்.

1 More update

Next Story