எஸ்.ஏ.20 ஓவர் லீக்: பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் நியமனம்


எஸ்.ஏ.20 ஓவர் லீக்: பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் நியமனம்
x

image courtesy:PTI

பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் முந்தைய பயிற்சியாளராக ஜொனதன் டிராட் செயல்பட்டார்.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரின் 4-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 25-ம் தேதி நிறைவு பெறுகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

இதில் பிரிட்டோரிய கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 3 சீசன்களாக ஜோனதன் டிராட் செயல்பட்டார். அவரது தலைமையில் பிரிட்டோரிய கேபிடல்ஸ் அணி பெரிய அளவில் செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. முதல் சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மட்டுமே அந்த அணியின் சிறப்பான செயல்பாடாகும். இதன் காரணமாக 4-வது சீசனுக்கு முன் டிராட்டை அந்த பதவியிலிருந்து பிரிட்டோரிய கேபிடல்ஸ் நிர்வாகம் விலக்கி உள்ளது.

இதனையடுத்து பிரிட்டோரிய கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்படுவது இது முதல் முறையாகும்.

எதிர்வரும் சீசனுக்காக அணியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story