எஸ்.ஏ.20 ஓவர் லீக்; ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப்

Image Courtesy:@SunrisersEC
தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
க்கெபர்ஹா,
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதன் 3வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 43 ரன்கள் எடுத்தார். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் எவான் ஜோன்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஜோபர்க் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 14 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
ஜோபர்க் தரப்பில் அதிகபட்சமாக டெவான் கான்வே 43 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ ஜான்சென், ரிச்சர்ட் க்ளீசென், பார்ட்மென் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டம் நடைபெறுகிறது.
அதில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் எம்.ஐ.கேப்டவுன் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.






