எஸ்.ஏ.20 ஓவர் லீக்: ஏலத்தில் அதிக தொகை.. பிரெவிஸ் சாதனை

image courtesy:PTI
4-வது எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று நடைபெற்றது.
கேப்டவுன்,
6 அணிகள் பங்கேற்கும் 4-வது எஸ்.ஏ.20 எனப்படும் தென் ஆப்பிரிக்க லீக் கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி முதல் பிப்ரவரி 24-ந்தேதி வரை தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் ஏலம் நேற்று நடந்தது.
இதில் தென் ஆப்பிரிக்க இளம் அதிரடி பேட்ஸ்மேன் டிவால்ட் பிரெவிசை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அவரை எடுக்க ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ் முயற்சித்த போதிலும் இறுதியில் ரூ.8.31 கோடிக்கு பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அவரை தட்டி தூக்கியது. இதன் மூலம் எஸ்.ஏ. வரலாற்றில் அதிக விலைக்கு போன வீரர் என்ற சாதனையை பிரெவிஸ் படைத்தார்.
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் கேப்டனான எய்டன் மார்க்ரமை ரூ.7 கோடிக்கு டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் வாங்கியது. தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் வியான் முல்டரை ரூ.4.5 கோடிக்கு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வாங்கியது.






