சஞ்சு சாம்சனுக்கு உதவிய சச்சின்

சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.
சஞ்சு சாம்சனுக்கு உதவிய சச்சின்
Published on

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்களிப்பை அளித்தார். அவர் 46 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார்.

சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் 321ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் அவருக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

தொடர்நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன் கூறுகையில்,

'ஒரு கனவு உலகத்தில் இருப்பது போல் உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுணர்வுடனும் இருக்கிறேன். எனது உணர்வுகளை விவரிக்க வார்த் தைகளே இல்லை. இந்த தருணத்துக்காக நீண்ட காலமாக உழைத்து வந்தேன்.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சரியாக விளையாடாத போது (5 ஆட்டத்தில் 46 ரன்) முற்றிலும் மனம் உடைந்து போனேன். எனது கனவு சிதறி விட்டதாக நினைத்தேன். அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தேன். ஆனால் கடவுள் எனக்காக வேறு திட்டங் களை வைத்திருந்தார். திடீரென முக்கியமான ஆட்டத்தில் களம் காண வாய்ப்பு கிடைத்தது. அதை நான் கச்சிதமாக பயன்படுத்திக் கொண் டேன்.இக்கட்டான நேரத்தில் முன்னாள் வீரர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு உதவினர். குறிப்பாக கடந்த இரு மாதங்களாக சச்சின் தெண்டுல்கரிடம் தொடர்பில் இருந்தேன். ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் இருந்த போது, மனரீதியாக எப்படி இருக்க வேண்டும் உள் ளிட்ட நிறைய ஆலோசனைகளை தெண்டுல்கர் வழங்கினார். இறுதிப் போட்டிக்கு முன்பாக கூட நான் எத்தகைய மனநிலையில் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள பேசினார். அவரது வழிகாட்டுதலும், ஆலோசனையும் சாதிக்க உதவிகரமாக இருந்தது' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com