ஜம்மு-காஷ்மீர் அணிக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து

ஜம்மு காஷ்மீர் அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அணிக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து
Published on

மும்பை,

ரஞ்சி டிராபி 2025-2026 சீசனில் ஜம்மு-காஷ்மீர் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கர்நாடகாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. வரலாற்று சாதனைப் படைத்துள்ள ஜம்மு-காஷ்மீர் அணிக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;

காஷ்மீர் பேட்கள் (Willows) ஏராளமான சாம்பியன்களின் கிட்ஸ்-களின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஏராளமான சாம்பியன்களை உருவாக்க காரணமாக இருந்த காஷ்மீர், தற்போது அவர்களாகவே சாம்பியனாகியிருப்பது அழகாக உள்ளது. இந்த சீசன் நிலைத்தன்மை, மீள்தன்மை மற்றும் சீசன் முழுவதும் சிறந்து விளங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த அணிக்கு கட்டமைக்கப்பட்டது. பந்து வீச்சில் நபியின் தாக்கம் தனித்தன்யைமாக இருந்தது. அணி, பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு ஒரு வரலாற்று தருணம். இது போன்ற பயணங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டின் அழகை வரையறுக்கின்றன.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com