

அகமதாபாத்,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 இவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கி விளையாடியது.
தொடக்கம் முதல் பெங்களூரு வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதனால் 18ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.விராட் கோலி 75 ரன்கள் எடுத்தார்.இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூரு அணி 2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
தொடர்ச்சியாக ஐபிஎல் பட்டங்களை வென்றதற்காக பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள்.வெற்றியானது விளையாட்டில் நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகளை மாற்றிவிடுகிறது. ஒருமுறை வென்ற பிறகு, உங்களால் அதைச் செய்ய முடியும் என்பதை நிரூபிப்பது பணியல்ல, மாறாக அதைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதை நிரூபிப்பதே பணியாகும். இந்த சீசனில் ஆர்சிபி அந்த சவாலை அற்புதமாக எதிர்கொண்டது. இது முற்றிலும் தகுதியான ஒரு சாதனை. என தெரிவித்துள்ளார்.