சச்சின் தெண்டுல்கரின் மகன் திருமணம்: ஜனாதிபதி, பிரதமருக்கு அழைப்பு

சச்சின் தெண்டுல்கர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.


சச்சின் தெண்டுல்கரின் மகன் திருமணம்: ஜனாதிபதி, பிரதமருக்கு அழைப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன்-சானியா சந்தோக் திருமணம் மார்ச் 5-ந்தேதி நடக்கிறது.இதையொட்டி சச்சின் தெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை நேற்று நேரில் சந்தித்து மகன் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தார்.

அர்ஜூன் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் லக்னோ அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com