

கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சுடன் மோதியது.
அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் கொல்கத்தா அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.குஜராத் சார்பில் சுப்மன் கில் 83 ரன்னும், ஜோஸ் பட்லர் 57 ரன்னும், சாய் சுதர்சன் 53 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார். இவர் 13 ஆட்டங்களில் 554 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.
2வது இடத்தில் குஜராத் அணியின் சுப்மன் கில் 552 ரன்னும், 3வது இடத்தில் ஐதராபாத்தின் ஹென்ரிச் கிளாசன் 508 ரன்னும் குவித்துள்ளனர்.