

மும்பை,
2026 டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. 254 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது, இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்சிசெய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி போட்டியின் 18-வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் நேராக அவரிடமே அடித்தார். பந்து தரையில் பட்டு பும்ராவிடம் ச
பந்து தரையில் பட்டு பும்ராவிடம் சென்றது. ஆனால், விஐபி கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சாக்ஷி தோனி,அது 'கேட்ச்' என்று தவறாக நினைத்து இருக்கையில் இருந்து குதித்து உற்சாகமாகக் கொண்டாடத் தொடங்கினார்.
சாக்ஷி தவறுதலாகக் கொண்டாடுவதைக் கண்ட எம்.எஸ். தோனி, உடனடியாக அவரை அமைதிப்படுத்தினார். பந்து தரையில் பட்டு வந்ததைச் சைகை மூலம் சுட்டிக்காட்டிய தோனி,சிரித்துக்கொண்டே சாக்சியை "உட்காரு" என்று கூறினார்.