சால்ட், கோலி அரைசதம்.. ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு 4-வது வெற்றி பெற்று அசத்தல்

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் 65 ரன்கள் அடித்தார்.
சால்ட், கோலி அரைசதம்.. ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு 4-வது வெற்றி பெற்று அசத்தல்
Published on

ஜெய்ப்பூர்,

18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்தது. பெங்களூரு தரப்பில் ஹேசல்வுட், குருனால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன விராட் கோலி - பில் சால்ட் களமிறங்கினர். இதில் விரா கோலி நிதானமாக விளையாட பில் சால்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.

முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பில் சால்ட் 65 ரன்களில் (33 பந்துகள்) ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலியுடன் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இருவரும் மேற்கொண்டு விழாமல் பார்த்து கொண்டதுடன் பெங்களூரு அணியையும் வெற்றி பெற வைத்தனர்.

இதன் மூலம் 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த பெங்களூரு 175 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. விராட் கோலி 62 ரன்களுடனும், படிக்கல் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் குமார் கார்த்திகேயா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

நடப்பு தொடரில் பெங்களூரு அணி பதிவு செய்த 4-வது வெற்றி இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com