பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட் அணி
ஆஸ்திரேலியா,
ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.அதிகபட்சகமாக ஹார்வி 56 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார்.
இதனை தொடர்ந்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி 16.5 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . பிரிஸ்பேன் ஹீட் அணியில் அதிகபட்சமாக சாம் ஹிஸ்ல்ட் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதன் மூலம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட் அணி .

