

சென்னை,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று சென்னையில் நடைபெறும் 31வது ஆட்டத்தில் கனடா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கனடா அணியின் கேப்டன் திலபிரீத் பஜ்வா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கனடா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அந்த அணியில் யுவ்ராஜ் சம்ரா சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்ட அவர் சதமடித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது,