

சென்னை,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் , மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அபார வெற்றி பெற்றது. இந்த இமாலய வெற்றி சாதனைப் புத்தகங்களை மாற்றியமைத்தது மட்டுமின்றி, ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் நிறத் தொப்பிகளுக்கான (Orange & Purple Cap) பட்டியலிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கேவின் சஞ்சு சாம்சன் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தால் டாப் 3 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட நான்கு சதங்களில் இரண்டு சஞ்சு சாம்சனுடையது. அவர் மொத்தம் 293 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணியின் அபிஷேக் சர்மா (323 ரன்கள்) மற்றும் ஹென்ரிச் கிளாசன் (320 ரன்கள்) ஆகியோர் இன்னும் முதல் இரண்டு இடங்களை அலங்கரிக்கின்றனர்.
இன்று இரவு பெங்களூருவில் நடைபெறும் ஆர்சிபி, குஜராத் மோதலில் இப்பட்டியலில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஷுப்மன் கில் (265 ரன்கள்), விராட் கோலி (247 ரன்கள்) மற்றும் ரஜத் படிதார் (230 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இளம் வீரர்கள் கடும் போட்டி போட்டு வருகின்றனர். மும்பைக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாக்கூரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், அன்ஷுல் கம்போஜ் 14 விக்கெட்டுகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
லக்னோ அணியின் பிரின்ஸ் யாதவ் 13 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இஷான் மலிங்கா (SRH) மற்றும் பிரசித் கிருஷ்ணா (GT) தலா 12 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.