அரையிறுதி போட்டி: சாம்சன் அரைசதம்... 11 ஓவர்களில் இந்திய அணி 130-2

இந்திய அணி 11 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அரையிறுதி போட்டி: சாம்சன் அரைசதம்... 11 ஓவர்களில் இந்திய அணி 130-2
Published on

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அபிஷேக் சர்மா ஏமாற்றமளித்தார். அவர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சாம்சனும், இஷான் கிஷனும் இணைந்து அதிரடி காட்டினர்.

இஷான் கிஷன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 11 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com