பாகிஸ்தான் அணிக்கு சானியா மிர்சா வாழ்த்து

பாகிஸ்தான் அணிக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு சானியா மிர்சா வாழ்த்து
Published on

ஐதராபாத்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறது. பாகிஸ்தானுக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சானியா மிர்சா தனது டுவிட்டர் பதிவில், சரிவில் இருந்து மீண்டு வந்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருப்பதற்கு வாழ்த்துகள். அவர்கள் எப்பொழுதும் கணிக்க முடியாத அணி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்கள். இதன் மூலம் உலக கோப்பை போட்டி முன்பை விட அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை, சானியா திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com