

சென்னை,
ஐபிஎல்லில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் சர்மா, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சஞ்சு சாம்சனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. அதில் முக்கிய பங்காற்றியவர் சஞ்சு சாம்சன். இந்நிலையில், அவருக்கு ஜிதேஷ் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;
“சஞ்சுவை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், ஒரு நல்ல மனிதனாக எனக்கு மிகவும் பிடிக்கும். இத்தனை சாதனைக்கும் அவர் தகுதியானவர். எப்போதும் அவருக்கு நல்லது நடக்க வேண்டும்!" என்று ஜித்தேஷ் ஷர்மா கூறினார்.