டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் - ஸ்ரீகாந்த் சொல்கிறார்

திலக் வர்மா மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழப்பதாக ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் - ஸ்ரீகாந்த் சொல்கிறார்
Published on

சென்னை,

10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற எஞ்சி உள்ள 2 ஆட்டங்களிலும் (ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்) கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் பலவீனங்களை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பிளேயிங் 11-க்குள் வர வேண்டும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வர்மா மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனார். அப்படி ஒரு ஷாட்டை விளையாடிய பிறகு அவர் களத்தில் இருக்க தகுதியற்றவராக இருந்தார்.

விராட் கோலி போன்ற ஒரு ரன் இலக்கு துரத்தும் ஒரு வீரர் இல்லாதது அணியில் பெரிய ஓட்டையை தெளிவாக காட்டுகிறது. அவர் இல்லாமல் இந்தியா பெரிய ஸ்கோரை துரத்த தொடர்ந்து போராடுகிறது. இதனால் அனைத்து அணிகளும் முதலில் பேட்டிங் செய்து இந்தியாவுக்கு ரன்களை இலக்குகளாக நிர்ணயிக்கும்”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com