

சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இறுதிகட்டத்தை எட்டியது. இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அபிஷேக் சர்மா சொதப்பி வருகிறார். ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.7 போட்டிகளில் விளையாடி 89 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டி அபிஷேக் சர்மாவின் சிறந்த நாளாக இருக்கும் என சஞ்சு சாம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், நான் விளையாடும் முதல் இறுதிப் போட்டி இதுவாகும். என்னுடைய வாழ்க்கையில் சிறந்த தருணங்களில் இது ஒன்று எனவும் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.