சஞ்சு சாம்சனுக்கு நாளை பிரமாண்ட பாராட்டு விழா

இந்திய அணி 'சாம்பியன்' பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு நாளை பிரமாண்ட பாராட்டு விழா
Published on

சென்னை,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இந்திய அணி 'சாம்பியன்' பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் சரவெடியாக வெடித்தார். 46 பந்துகளில் 89 ரன்கள் அடித்த சாம்சன், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இறுதிப்போட்டி மட்டும் இன்றி அரையிறுதியிலும் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியிலும் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் சஞ்சு சாம்சன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில் நாளை சஞ்சு சாம்சனுக்கு அதிகாரப்பூர்வ பாராட்டு விழா கேரள அரசு சார்பில் நடத்தப்படுகிறது

இந்த நிகழ்ச்சியை முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். விளையாட்டு அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் பல மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com