

சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங் கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது
தொடக்கத்தில் ருதுராஜ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே இருவரும் அதிரடியாக விளையாடினர். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் கடந்த பிறகு சஞ்சு சாம்சன் டெல்லி அணி பந்துவீச்சாளர்களை மிரள விட்டார். ஆயுஷ் மாத்ரே 59 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.