ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’
Published on

ராஜ்கோட்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-பெங்கால் இடையிலான இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 171.5 ஓவர்களில் 425 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தர்மேந்திரசிங் ஜடேஜா 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பெங்கால் அணியும் நிதான பாணியை கடைபிடித்ததால் ஸ்கோர் வேகம் மந்தமானது. ஆட்ட நேரம் முடிவில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. சுதிப் சட்டர்ஜி 47 ரன்னுடனும், விருத்திமான் சஹா 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இதற்கிடையே சவுராஷ்டிரா வீரர் புஜாரா முதுகு வலி காரணமாக நேற்று பீல்டிங் செய்ய வரவில்லை. தேவை ஏற்பட்டால் 2-வது இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்வார் என்று சவுராஷ்டிரா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com