

திருவனந்தபுரம்,
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 30 ரன்னில் அவுட் ஆனார்.
3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் சூர்யகுமார் இணைந்தார். இந்த ஜோடி பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன் குவித்து அவுட்டானார்.
இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியில் மிரட்டினார்.
அவர் 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்தனர். இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 6-வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் நியூசிலாந்தை 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
இந்திய அணியின் அர்ஷீத் சிங், அக்சர் படேல் 3, வருண், ரிங்கு சிங் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நியூசிலாந்து அணி தரப்பில் பின் ஆலென் 80, இஷ் சோதி 33, ரச்சின் ரவீந்திரா 30 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் இஷான் கிஷன் 43 பந்துகளில் 10 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 103 ரன்களை குவித்தார். இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 63, ஹர்திக் பாண்ட்யா 42, அபிஷேக் ஷர்மா 30 ரன்கள் எடுத்தனர்.