மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி

டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி
Published on

லண்டன்,

10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

ஸ்காட்லாந்து - அயர்லாந்து

இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் கெத்ரின் பிரேஸ் அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்த்தார்.

பின்னர், 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து 19.1 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அயர்லாந்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஸ்காட்லாந்து வீராங்கனைகள் கிறிஸ்டி கொர்டன், கெதரின் பிரேசர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com