2-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


2-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
Published on: 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

டாஸ்

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கேப்டன் ஹாரி புரூக், ஜோ ரூட், பென் டக்கெட் ஆகியோரின் ஆட்டம் அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

X