

மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று போட்டிகள் முடிவில், அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறின.
இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.