இந்தியாவுக்கு எதிரான தொடர்: நியூசிலாந்து அணியில் இடம் பெற்ற தமிழக வீரர்

நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.
புதுடெல்லி,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் வதோதரா (ஜன.11), ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆதித்யா அசோக் கூறுகையில்,
‘அதிர்ஷ்டவசமாக சென்னைக்கு வந்து பயிற்சி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த பயிற்சியின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.என தெரிவித்தார்.
Related Tags :
Next Story






