நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: முக்கிய வீரர்களுக்கு ஓய்வு


நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
x

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

புதுடெல்லி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜன. 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. டி20 போட்டிகளை பொறுத்தவரை ஜன.21, 23,25, 28,31 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

அதன்படி , ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட்டை நீக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.

1 More update

Next Story