பாலியல் புகார் - கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் கைது

பாலியல் வன்கொடுமை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரலை கொல்கத்தா ஹூக்ளி மாவட்ட போலீசார். கைது செய்தனர்.
பாலியல் புகார் -  கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் கைது
Published on

கொல்கத்தா

டெல்லி கேபிடல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் அபிஷேக் போரல், மருத்துவ மாணவி ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஹூக்ளியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரலை கொல்கத்தா ஹூக்ளி மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. புகார்தாரருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய எந்தவொரு உள்ளடக்கமும் வெளியே பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, போலீசார் ஏற்கனவே ஒரு பென் டிரைவைக் கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com