ஷாருக்கான் அதிரடி.. ரெயில்வே அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தமிழ்நாடு

ஷாருக்கான் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 46 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தமிழ்நாடு அணி
Published on: 

இந்தூர்,

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்துள்ளது. இதனால் ரெயில்வே அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

172 ரன்கள்

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை இன்று தொடங்கியது. டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் எலைட் பிரிவில் 32 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தொடக்க நாளில் நடைபெறும் ஆட்டங்களில் ஒன்றில் தமிழ்நாடு - ரெயில்வே அணிகள் மோதுகின்றன. இந்தூரில் உள்ள டேலி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரெயில்வே அணியின் கேப்டன் முகம்மது சைப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 172 ரன்கள் எடுத்தது.

ஷாருக் கான் அதிரடி

தொடக்க வீரர் அமித் சத்விக் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். பி. சச்சின் 34 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். ஷாருக் கான் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 46 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதிக்கட்டத்தில் ஆர். ராஜ்குமார் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். இதனால் தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரெயில்வே அணி விளையாட உள்ளது.

X