

டாக்கா,
வங்களாதேச அணி ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்து வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விளையாடாமல் ஓய்வில் இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால், வரும் மார்ச் 12 முதல் ஏப்ரல் 8ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷாகிப் உடல் மற்றும் மன நிலை காரணமாக ஒரு இடைவெளி எடுப்பதாகக் கூறினார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணி சுற்று பயணம் மேற்கொண்டு வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஷாகிப் 74 ரன்கள் மற்றும் ஏழு விக்கெட்டுகளை எடுத்தார்.
சில வாரங்களுக்கு முன் நடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்திலும் ஆல்ரவுண்டர் ஷாகிபை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இந்நிலையில் ஷகிப் அல் ஹசன் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.