ஷாகின் அப்ரிடி ஒன்றும் வாசிம் அக்ரம் கிடையாது - இந்திய முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ஆமதாபாத்,

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நல்ல நிலையில் இருந்தது.

அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இலக்கை விரட்டிய இந்திய அணி 30.3 ஓவர்களிலேயே 192 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் தொடக்கத்தில் விக்கெட் எடுத்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்புவார் என எதிர்பார்க்கப்பட ஷாகின் அப்ரிடி பந்துவீச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் ஷாகின் அப்ரிடி புதிய பந்தில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரே தவிர வாசிம் அக்ரமுக்கு நிகரானவர் அல்ல என ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது,

நசீம் ஷா காயத்தால் விளையாடாத நிலையில் பாகிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சின் தரம் எப்படி என்று நமக்கு தெரியும். மேலும் ஷாகின் அப்ரிடி ஒன்றும் வாசிம் அக்ரம் கிடையாது. புதிய பந்தில் சில விக்கெட்டுகள் எடுப்பதை தவிர்த்து அவரிடம் ஸ்பெஷல் எதுவும் கிடையாது.

அவர் சாதாரண பவுலர் தான். எனவே அவரை எதிர்கொள்வது பெரிய விஷயம் கிடையாது என்ற உண்மையை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com