இந்திய அணியில் மீண்டும் ஷமியை தேர்வு செய்ய வேண்டும்: கங்குலி

இந்த தொடரில் லக்னோ அணி 2 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியில் மீண்டும் ஷமியை தேர்வு செய்ய வேண்டும்: கங்குலி
Published on

சென்னை,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் லக்னோ அணி 2 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி, தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர், மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஷமி பும்ராவுடன் இணைந்து பந்துவீச வேண்டும். வேறு எங்கும் அல்ல. அந்த அளவிற்கு அவர் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதை நாம் பார்த்தோம்.

ஷமி தற்போது முழு உடல் தகுதியுடன் உள்ளார்.கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய ஷமி, 37 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது அவரது மேட்ச் பிட்னஸை நிரூபித்துள்ளது.அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, அனுபவம் வாய்ந்த ஷமியைப் புறக்கணிக்காமல், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோருடன் இணைந்து ஷமியையும் அணியில் சேர்க்க வேண்டும். என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com