ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் 616 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்றவர் ஷான் மார்ஷ்.
ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு
Published on

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ், தொழில்முறை கிரிக்கெட்டில் முழுமையாக ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் அதன் பிறகு 20 ஓவர் லீக் போட்டிகளில்மட்டும் விளையாடி வந்தார். இந்த நிலையில் பிக்பாஷ் கிரிக்கெட்டில் வருகிற 17-ந்தேதி சிட்னி தண்டருக்கு எதிரான ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக களம் இறங்கும் அவர், இதுவே தனது கடைசி போட்டி என்று கூறியுள்ளார்.

40 வயதான ஷார் மார்ஷ் ஆஸ்திரேலிய அணிக்காக 38 டெஸ்டில் ஆடி 6 சதம் உள்பட 2,265 ரன்களும், 73 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 7 சதம் உள்பட 2,773 ரன்களும் எடுத்துள்ளார். இவரது சகோதரர் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com