ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம்; காதலியை கரம் பிடிக்கிறார்...!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான்.
அபுதாபி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான். இவருக்கும் ஆயிஷா முகர்ஜி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சொரவர் தவான் என்ற மகன் உள்ளார்.
இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜி தம்பதி விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து அயர்லாந்தை சேர்ந்த சோபியா ஷைன் என்ற பெண்ணுடன் ஷிகர் தவானுக்கு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, நட்பு காதலாக மாறியது. சோபியா ஷைன் அமெரிக்காவை சேர்ந்த நிதிச்சேவை நிறுவனத்தில் இரண்டாம் துணைத்தலைவராக செயல்பட்டு வந்தார். அவர் துபாயில் உள்ள கிளையில் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஷிகர் தவானுக்கும் காதல் ஏற்பட்டது. காதலிப்பதை இருவரும் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் உறுதிபடுத்தினர்.
இந்நிலையில், ஷிகர் தவானுக்கும் அவரது காதலி சோபியா ஷைனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தவானும், சோபியாவும் துபாயில் வசித்து வரும் நிலையில் அங்கு வைத்து நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படத்தை ஷிகர் தவான் வெளியிட்டுள்ளார். ஷிகர் தவான் , சோபியாவுக்கு அடுத்த மாதம் இந்தியாவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






