

சென்னை,
நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தனது வெற்றிப் பதக்கத்தை தந்தை ராஜேஷ் துபேவுக்கு அணிவித்து நெகிழ்ச்சியடைந்தார்.
இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய நிலையில், வீட்டிற்கு சென்ற ஷிவம் துபே தனது பதக்கத்தை தந்தையின் கழுத்தில் அணிவித்து மகிழ்ந்தார்.
இந்த நெகிழ்ச்சியான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த துபே, “எனது உண்மையான ஹீரோ” என்று தலைப்பிட்டு தனது மகிழ்ச்சியைை வெளிப்படுத்தினார். ஷிவம் துபேவின் இந்த செயல் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இறுதிப் போட்டியில் ஜேம்ஸ் நீஷம் வீசிய கடைசி ஓவரில் துபே விளாசிய சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் இந்தியாவின் இமாலய ஸ்கோரான (255/5) உருவாக முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.