இன்னும் 5 ஆண்டுகள் ஆடியிருந்தால் சக்கர நாற்காலியில் முடங்கியிருப்பேன் - ஷோயப் அக்தர் உருக்கம்

இன்னும் 5 ஆண்டுகள் ஆடியிருந்தால் சக்கர நாற்காலியில் முடங்கியிருப்பேன் என - ஷோயப் அக்தர் உருக்கமாக கூறி உள்ளார்.
இன்னும் 5 ஆண்டுகள் ஆடியிருந்தால் சக்கர நாற்காலியில் முடங்கியிருப்பேன் - ஷோயப் அக்தர் உருக்கம்
Published on

மெல்போர்ன்

பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ், சோயப் அக்தர் நீண்ட காலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை பெற்று வந்தார்.

மெல்போர்னில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள 'நான் வலியில் இருக்கிறேன், எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்' என்று ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் இன்னும் 4-5 ஆண்டுகள் கூடுதலாக பாகிஸ்தானுக்கு ஆடியிருக்க முடியும் ஆனால் அப்படி ஆடியிருந்தால் அப்போதே நான் சக்கர நாற்காலியில் வாழ்நாள் பூராவும் அமர வேண்டிய துர்பாக்கியசாலியாகியிருப்பேன். அதனால்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன்.

ஆனால் அதுவுமே பாகிஸ்தானுக்காகச் செய்வது மதிப்பு மிக்கதுதான். வேகமாக வீசுவதன் பலன் எலும்புகளை இழந்து விடுவோம். ஆனால் அது பரவாயில்லை. மீண்டும் பாகிஸ்தானுக்காக எலும்புகளை இழந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது" என்றார்.

அவர் தான் கடந்த 11 ஆண்டுகளாக வலியில் இருப்பதாக வீடியோவில் கூறியுள்ளார். ஓய்வு பெற்ற பிறகும் முழங்கால் வலி பயங்கரம் என்கிறார். இதுதான் வேகப்பந்து வீச்சுக்கு நாம் கொடுக்கும் விலை என்கிறார் அக்தர். மேலும் தான் கடும் வலியில் இருப்பதாகவும் ரசிகர்கள் தனக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் நெக்குருகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com