சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி: தோனி அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என தகவல்

சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி: தோனி அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என தகவல்
Published on

சென்னை,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

ஐபிஎல் 2026 சீசனுக்காக தயாராகி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, காயம் காரணமாக ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். பின்னங்காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு பிரச்சினையால் முதல் இரண்டு வாரங்களுக்கு அவர் விளையாட முடியாது என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

வரும் 11ம் டெல்லி அணிக்கு எதிராக தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்ட்டது. இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி விளையாட மாட்டார் என தகவல் வெளியகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com