

சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரர் நாதன் எல்லிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.தொடரின் தொடக்கத்திலே வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகியுள்ளது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.