ஷ்ரேயாஸ் அய்யரின் தன்னலமற்ற அணுகுமுறையே அவரது சிறந்த குணம்: கம்பீர்

தனது தனிப்பட்ட நலனை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைப் பாராட்டியுள்ளார்.
ஷ்ரேயாஸ் அய்யரின் தன்னலமற்ற அணுகுமுறையே அவரது சிறந்த குணம்: கம்பீர்
Published on: 

மும்பை,

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஷ்ரேயாஸ் அய்யரின் தலைமைப் பண்பு மற்றும் அணிக்காக தனது தனிப்பட்ட நலனை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய கம்பீர், ஷ்ரேயாஸிடம் தனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவரது நெகிழ்வான மற்றும் தன்னலமற்ற அணுகுமுறை. குறிப்பாக, சில நேரங்களில் தனது வழக்கமான பேட்டிங் வரிசையில் களமிறங்காமல், அணியின் தேவைக்கேற்ப மற்றொரு வீரரை தனக்கு முன்பாக அனுப்புவதற்கு ஷ்ரேயாஸ் தயாராக இருந்தார்.

ஒரு அணியின் கேப்டனாக இருப்பவர், அதுவும் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பவர், தனது தனிப்பட்ட பேட்டிங் இடத்தை விட்டுக்கொடுப்பது மிகவும் அரிதான விஷயம். பொதுவாக ஒரு முன்னணி பேட்ஸ்மேன் தனது வழக்கமான இடத்தில் விளையாட விரும்புவார். ஆனால், ஷ்ரேயாஸ் அணியின் சூழ்நிலையை முதலில் புரிந்துகொண்டு அதற்கேற்ப தனது முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இருந்தார்.

குறிப்பாக, அணியின் தேவைக்காக வேறு ஒரு வீரருக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அல்லது இடது கை – வலது கை பேட்டிங் கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், ஷ்ரேயாஸ் தனது தனிப்பட்ட பேட்டிங் இடத்தைப் பற்றி பிடிவாதமாக இருக்கவில்லை. அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக அமைய வேண்டும் என்பதையே அவர் முக்கியமாகக் கருதியதாக கம்பீர் தெரிவித்தார். இதுபோன்ற அணுகுமுறை ஒரு வீரரிடம் இருப்பது மட்டுமல்லாமல், ஒரு தலைவரிடம் இருப்பது மிகவும் முக்கியமான குணம் என்றும் அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com