கேப்டன்சி கிங் ஷ்ரேயாஸ் ஐயர்… புதிய மைல்கல்லை எட்டி சாதனை

பஞ்சாப் கிங்ஸ் இன்று சிஎஸ்கே-வை எதிர்கொள்கிறது.
கேப்டன்சி கிங் ஷ்ரேயாஸ் ஐயர்… புதிய மைல்கல்லை எட்டி சாதனை
Published on: 

சென்னை,

ஐபிஎல்-ல் கேப்டன்சி என்பது மிக முக்கியமான ஒரு பங்கு. அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது கேப்டன்சி திறமையால் தனி முத்திரை பதித்து வருகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் 61.11 வெற்றி சதவிகிதத்தை பதிவு செய்து, அந்த அணியின் வரலாற்றிலேயே சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.

இதற்கு முன்பு யுவராஜ் சிங், ஜார்ஜ் பெய்லி, ஆடம் கில்கிறிஸ்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். ஆனால் அவர்களை மிஞ்சியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

Also Read
“என் வெற்றியை பார்த்து பொறாமைப்படுகிறார்கள்” - ரஹானே
கேப்டன்சி கிங் ஷ்ரேயாஸ் ஐயர்… புதிய மைல்கல்லை எட்டி சாதனை

நீண்ட காலமாக அரையிறுதியை கூட எட்டாத பஞ்சாப் அணி அவரது தலைமையில் கடந்த சீசனில் இறுதிப்போட்டிவரை சென்றது. அதற்கு முந்தைய சீசன் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் அந்த ஆண்டு கோப்பை வென்று அசத்தினார்.

இந்தநிலையில், அவரது சிறந்த கேப்டன்சி திறன் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ் இந்த சீசனில் கோப்பையை வெல்லுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே-வை எதிர்கொள்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com