துலீப் டிராபி தொடரை தவறவிடும் சுப்மன் கில்..? - காரணம் என்ன


துலீப் டிராபி தொடரை தவறவிடும் சுப்மன் கில்..? - காரணம் என்ன
x

image courtesy:PTI

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது.

மும்பை,

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.

இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

துலீப் டிராபி தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த தொடரில் இருந்து சுப்மன் கில் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை அவர் இந்த தொடரில் இருந்து விலகினால் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக அங்கித் குமார் செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது.

1 More update

Next Story