ரன் ஓட மறுத்த ஸ்மித்...களத்தில் கடுப்பான பாபர் அசாம்

ஸ்மித் மற்றும் பாபர் அசாம் இடையே நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் டி20 தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் வீரர்களான ஸ்மித் மற்றும் பாபர் அசாம் இடையே நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த தொடரில் நேற்று சிட்னியில் 37வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. அதில் தண்டர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிக்ஸர்ஸ் அணி தோற்கடித்தது.
அப்போட்டியில் முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் சதமடித்து 110* (65) ரன்களை குவித்தார். அடுத்து விளையாடிய சிக்ஸர்ஸ் அணி 17.2 ஓவரில் 191/5 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 100 (42), பாபர் அசாம் 47 (39) ரன்கள் விளாசி வெற்றியில் பங்காற்றினார்கள்.
இப்போட்டியின் 11வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க முயன்ற பாபரின் அழைப்பை ஸ்மித் தவிர்த்தார். இதனால், பாபர் சிறிது கடுப்பானார். ஆனால், அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஸ்மித் 32 ரன்களை சேர்த்தார்.
பின்னர் 13வது ஓவரின் முதல் பந்திலேயே பாபர் போல்டானார். இதனால் வெளியேறும் போது, பவுண்டரி லைனை தாக்கி தனது விரக்தியை பாபர் வெளிப்படுத்தினார். இது தற்போது பேசு பொருளாகியுள்ளது






